இஸ்லாமாபாத்: இந்திய அர்த்தப்பூர்வமான, ஆக்கப்பூர்வமான, தீர்வு காணக் கூடிய வகையில் பேச முன்வந்தால் மட்டுமே நான் டெல்லி செல்வது குறித்து முடிவெடுக்க முடியும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹமூத் குரேஷி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவை சுற்றிப் பார்க்க நான் போக விரும்பவில்லை. அர்த்தப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான முறையில் அவர்கள் பேசத் தயாராக இருக்க வேண்டும். சரியான சூழல் நிலவினால் மட்டுமே நான் டெல்லி செல்வேன். இல்லாவிட்டால் போக மாட்டேன் என்றார் குரேஷி.
மேலும், இஸ்லாமாபாத்தில் நடந்த பேச்சுவார்த்தையின்போது இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு டெல்லியிலிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், அதில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின்படியே அவர் பேசியதாகவும், தான் கூறவில்லை என்றும் குரேஷி கூறினார்.
Leave a Reply