ஆர்.டி.எக்ஸ். வெடி குண்டுகளுடன் டெல்லியில் தீவிரவாதிகள் ஊடுருவல்

posted in: உலகம் | 0

டெல்லி காமன்வெல்த் விளையாட்டு போட்டியை சீர்குலைக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது.

அமெரிக்க உளவுத் துறையும், காமன்வெல்த் போட்டியின்போது வீரர்கள் மீது தாக்குதல் நடத்த லஷ்கர்- இ-தொய்பா தீவிரவாதிகள் தயாராகி வருவதாக எச்சரித்தது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் டெல்லியில் வரும் அக்டோபர் மாதம் 3-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டு வருகின்றன. போட்டிகள் நடக்கும் ஸ்டேடியங்கள் கட்டும் பணி ஓரளவு முடிந்து விட்டது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை வெற்றிகரமாக நடத்தும் பட்சத்தில் சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு மேலும் பல மடங்கு உயரும். இது பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

எனவே டெல்லி காமன்வெல்த் விளையாட்டு போட்டியை சீர்குலைக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. அமெரிக்க உளவுத் துறையும், காமன்வெல்த் போட்டியின்போது வீரர்கள் மீது தாக்குதல் நடத்த லஷ்கர்- இ-தொய்பா தீவிரவாதிகள் தயாராகி வருவதாக எச்சரித்தது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். எனவே அவர்கள் அனைவருக்கும் பலத்த பாதுகாப்பு கொடுக்க தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று உளவுத்துறையும் அறிவுறுத்தியது.

இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் சமீபத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு ஸ்டேடியத்துக்கும், செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிலையில் டெல்லி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு எதிர்பாராத திசையில் இருந்து மிரட்டல் வந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித் சிங் நீதா என்பவன் தலைமையில் தீவிரவாதிகள் குழு டெல்லியில் ஊடுருவி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்த தீவிரவாதிகள் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடக்கும்போது தற்கொலை தாக்குதல்களில் ஈடுபடக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை இன்று டெல்லி அரசிடம் பாகிஸ்தான் போலீசார் தெரிவித்தனர். தீவிரவாதிகள் யார், யார் டெல்லிக்குள் ஊடுருவி உள்ளனர் என்ற தகவல்களையும் பஞ்சாப் போலீசார் டெல்லி போலீசாருக்கு கொடுத்திருப்பதாக தெரிகிறது.

டெல்லியில் நாசவேலை செய்ய ஊடுருவி இருக்கும் தீவிரவாதிகளுக்காக 15 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடி குண்டுகள் கடத்தி வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வெடிகுண்டுகள் பஞ்சாப் வழியாக டெல்லிக்குள் போய் சேர்ந்து விட்டதாக பஞ்சாப் போலீசார் தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த எச்சரிக்கை தகவலை தொடர்ந்து டெல்லி போலீசார் மாநில எல்லைகளை சீல் வைத்து அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். விளையாட்டு போட்டி நடைபெற உள்ள மைதானங்கள், வீரர்கள் தங்கும் விடுதிகள் மற்றும் முக்கிய பகுதிகளில் கண் காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *