டாக்கா : இந்தியாவின் அண்டைநாடான வங்கதேசம், இந்தியாவிடமிருந்து ஆண்டுக்கு 250மெகாவாட் வீதம் 35 ஆண்டுகளுக்கு மின்சாரத்தை வாங்க முடிவு செய்திருப்பதாக டெய்லி ஸ்டார் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது : இதுகுறித்த ஒப்பந்தம், பவர் கிரிட் கார்ப்பரேசன் ஆப் இந்தியா லிமிடெட் பிரதிநிதிகளுக்கும், வங்கதேச பவர் டெவலப்மெண்ட் போர்டு பிரதிநிதிகளுக்கும் இடையே கையெழுத்தாகி உள்ளதாகவும், இது வங்கதேச வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் ஒப்பந்தம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியா வருகைபுரிந்த போது, இதுகுறித்து இந்திய தலைவர்களிடம் பேசியதாகவும், அதன் விளைவாகவேல இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், ஒரு சிறு துவக்கமே என்றும், மின் துறையில் இந்தியாவும், வங்கதேசமும் இணைந்து பல அளப்பரிய சாதனைகள் புரிய இருப்பதாக, ஷேக் ஹசீனாவின் அறிவியல் ஆலோசகர் தவ்ஹீக் இ-இலாஹி கருத்து தெரிவித்திருப்பதாக அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply