புதுடில்லி: பெட்ரோல் விலை இனி 15 நாள்களுக்கு ஒரு முறை நிர்ணயிக்கப்படவுள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப இந்த விலைகள் முடிவு செய்யப்படும்.
மத்திய அரசி்ன் எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பிபிசிஎல்), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (ஹெச்பிசிஎல்) ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து இந்த விலையை நிர்ணயம் செய்யவுள்ளன. பெட்ரோல் மீதான விலைக்கட்டுப்பாட்டை, மத்திய அரசு கடந்த மாதம் நீக்கியது. இதையடு்த்து அதன் விலை லிட்டருக்கு ரூ. 3.50 உயர்ந்தது. விலைக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதால் சர்வதேச சந்தை நிலவரத்துக்கேற்ப பெட்ரோல் விலையை மாற்ற வேண்டும். சர்வதேச கச்சா எண்ணெய் விலை தினந்தோறும் மாறும் என்பதாலும், இதனால் விலையை தினமும் மாற்றி அமலாக்குவது சிரமம் என்பதாலும், 15 நாள்களுக்கு ஒரு முறை புதிய விலை நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மாதந்தோறும் 2ம் தேதிகளிலும் 17ம் தேதிகளிலும் விலை மாற்றி அமைக்கப்படும். இந்த மாதம் 2ம் தேதி போய்விட்டதால் ஒருமுறை மட்டுமே விலை மாற்றம் மேற்கொள்ளப்படும். அடுத்த மாதம் முதல் மாதம் முதல் இருமுறை விலை மாற்றம் செய்யப்படும். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மாற்றியமைக்கும் விலையைப் பொறுத்து தனியார் எண்ணய் நிறுவனங்களான ரிலையன்ஸ், எஸ்ஸார், ஷெல் உள்ளிட்ட நிறுவனங்களும் விலை நிர்ணயம் செய்யும் என்று தெரிகிறது.
Leave a Reply