இலங்கையில் ஐ .நா., அலுவலகம் மூடல் ; அதிகாரிகள் திரும்ப அழைப்பு : பான் கி மூன் எரிச்சல்

posted in: உலகம் | 0

கொழும்பு : புலிகளை கொல்வதில் இலங்கை போர்க்குற்றம் புரிந்திருக்கிறது என்பதை முதலில் உலக அளவில் தெரியப்படுத்தியது ஐ.நா., அதிகாரிகள் தான்.

இந்த நாள் முதல் இலங்கை பெரும் அதிருப்தியில் இருந்து வந்தது. ஆனால் இது போன்று நடக்கவில்லை என்றும், ஆதாரங்கள் இல்லையென்றும் கூறி வந்தது. இது தொடர்பான விஷயத்தில் இலங்கை ஐ.நா.,வுடன் ஒத்துபோகாமல் உரசல் இருந்து வந்தது.

இந்நிலையில் இலங்கையில் ஐ.நா., அலுவலகத்தை மூட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் போர்க்குற்றம் தொடர்பாக விசாரிக்க அதிகாரிகள் குழுவை ஐ.நா., நியமித்தது, இதற்கு இலங்கை ஆளும் அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இந்நிலையில் கொழும்புவில் உள்ள ஐ.நா., தூதரகம் முன்பாக போராட்டம் நடத்த தேசிய சுதந்திர முன்னணியினர் முடிவு செய்தனர். ஆளும் அரசவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர் விமல் வீரவன்ச தலைமை வகித்தார், இதனால் ஐ.நா., அலுவலகம் உள்ளே அலுவலர்கள் யாரும் செல்ல முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டது.

இதனால் எரிச்சலும், கோபமும் அடைந்த ஐ.நா., செயலர் பான் கீ மூன், இங்கு ஐ.நா., அலுவலகத்தை மூடி விட முடிவு செய்தார். கொழும்பு ஐ.நா., ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நிலைக்கு வரவேண்டியதாக செயலர் நாயகம் தெரிவித்துள்ளார். இங்கு பணியாற்றும் அலுவலர்கள் நியூயார்க் திரும்புமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.

சீனாவின் நெருக்கமான நண்பன் : இது குறித்து இலங்கை எவ்வித கவலையும் கொள்ளவில்லை என்றே தெரிகிறது. அரசு தரப்பில் எவ்வித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. சீனாவின் நெருக்கமான நண்பராக இருக்கும் இலங்கை ஐ.நா., வை கண்டு கொள்ளாமல் இருப்பதில் ஆச்சரியம் இருக்க தேவையில்லை என்கின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *