பெங்களூரு : கண் சிகிச்சை மருந்துகள் , குளுகோமா தடுப்பு மருந்துகளை அறிமுகப்படுத்த தங்கள் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக, பயோகான் லிமிடெட் வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : தங்கள் நிறுவனம் பிராண்டட் பார்முலேஷன்ஸ் அடிப்படையில் பல்வேற வித மருந்துகளை உற்பத்தி செய்து வர்த்தகப்படுத்தி வருவதாகவும், இந்த ஆண்டு முதல் காம்பிரிஹென்சிவ் கேர் மற்றும் இம்முனோதெரபி பிரிவில் 4 புதிய அங்கங்களை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், தற்போதைய அளவில் தங்கள் நிறுவனம் 36 பிராண்டுகளில் மருந்துகளை வர்த்தகப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கண் சிகிச்சைக்கான மருந்துகள், குளுகோமா, புரோஸ்டோகிளாண்டின்ஸ், இன்ஜெக்டபிள் ஏபிஐஸ், போன்றவை தயாரிப்பிலும் ஈடுபடப் போவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply