மங்களூரு : இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான கார்ப்பரேஷன் வங்கி, 8.25 சதவீத வட்டி விகிதத்திலான புதிய வீடு மற்றும் வாகனக் கடனுதவி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
வீட்டுக் கடனுதவி திட்டத்திற்கு ‘கார்ப் ஹோம் ஸ்மார்ட்’ என்றும், வாகன கடனுதவி திட்டத்திற்கு ‘கார்ப் வைகிள் ஸ்மார்ட்’ என்றும் வங்கி பெயரிட்டுள்ளது. ‘கார்ப் ஹோம் ஸ்மார்ட்’ இத்திட்டத்தின் கீழ், ரூ. 50 லட்சம் வரையிலான கடன்களுக்கு முதலாண்டில் 8.25 சதவீத வட்டியும், அடுத்த 2 ஆண்டுகளுக்கு 8.75 சதவீத வட்டியும் வசூலிக்கப்பட இருப்பதாகவும், ‘கார்ப் வைகிள் ஸ்மார்ட்’ திட்டத்தில் முதலாண்டில் 8.25 சதவீத வட்டி வசூலிக்கப்பட இருப்பதாக வங்கி தெரிவித்துள்ளது. இந்த புதிய வீடு மற்றும் வாகன கடனுதவி திட்டஙகள் ஜூலை மாதம் 19ம் தேதியில் இருந்து டிசம்பர் 31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply