புதுடில்லி: போலி என்கவுன்டரில் சிக்கியுள்ள குஜராத் அமைச்சர் அமீத்ஷா வின் விஷயத்தில் மத்திய அரசுக்கு எவ்வித தலையீடும் இல்லை என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
இன்று பார்லி., கூட்டத்தொடர் துவங்கும் முன்னதாக பார்லி., வளாகத்தில் நிருபர்கள் கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மன்மோகன்சிங் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்; சி.பி.ஐ., என்பது “ காங்கிரஸ் “ பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன் அல்ல, பார்லி., கூட்டத்தொடரில் எந்த கேள்விக்கும் பதில் அளிக்க அரசு தயாராக இருக்கிறது . அமீத்ஷா வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இதன் மேற்பார்வையில் சி.பி., விசாரணை நடக்கிறது. இது எல்லா எதிர்கட்சிகளுக்கும் தெரியும் என்றார். மத்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கூறுவது தவறு . சபை நடவடிக்கை நல்ல முறையில் நடக்க உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.
அரசு கையில் தான் சி.பி.ஐ., இருக்கிறது. மத்திய அரசு ஆயுதமாக பயன்படுத்துகிறது, எனவே இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை தான் என பா.ஜ., கூறியுள்ளது.
இரங்கல் ஒத்திவைப்பு : அமளி , துமளி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பார்லி., கூட்டம் இன்று ( 26 ம் தேதி ) துவங்கியது. சமீபத்தில் மறைந்த ஷெகாவத், திக்விஜயசிங் ஆகியோர் மறைவுக்கு சபாநாயகர் இரங்கல் தெரிவித்தார். தொடர்ந்து சபை ஒத்தி வைக்கப்பட்டது.
பெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வு, அணு இழ்பீடு மசோதா, குஜராத் அமைச்சர் மீது சி.பி.ஐ., விசாரணை , போபால் விஷ வாயு நிவாரணம் தொடர்பான விஷயம் , காமன்வெல்த் போட்டி பாதுகாப்பு, காஷ்மீர் விவகாரம், உள்ளிட்ட விவகாரத்தில் நாளைய ( 27ம் தேதி ) நடக்கும் கூட்டத்தில் எதிர்கட்சிகள் சபையில் ஆளும் கட்சி மீது குற்றம் சுமத்தும் . இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் எந்த கேள்விக்கும் பதில் அளிக்க தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.
Leave a Reply