சென்னை : பிகோ காரை தயாரித்து உலக மக்களை தன் வசம் ஈர்த்துள்ள போர்டு இந்தியா நிறுவனம், தென் ஆப்ரிக்காவிற்கு பிகோ கார் ஏற்றுமதியை துவக்கியது.
இதுதொடர்பாக போர்டு இந்தியா நிறுவன நிர்வாக இயக்குனர் மைக்கேல் போன்ஹாம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : முதற்கட்டமாக, 1200 பிகோ கார்களை தென் ஆப்ரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளதாகவும், இன்னும் 5,000 கார்களுக்கான ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளதாகவும், கார்களின் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு, சென்னை மறைமலை நகரில் உள்ள தொழிற்சாலையில் 2வது யூனிட்டும் செயல்படத் துவங்கியுள்ளதாக அதில் அவர் தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப, டீசல் மற்றும் பெட்ரோல் மூலம் இயங்கக்கூடிய கார்களை உற்பத்தி செய்து வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள், ஆயிரம் பேரை, சென்னை யூனிட்டில் புதிதாக பணியமர்த்த இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply