ஆமதாபாத் : இந்தியாவின் மிகப்பெரிய சோலார் போட்டோவோல்டாயிக் பிளாண்டை, குஜராத் மாநிலம் மிதாப்பூரில் அமைக்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : இது 50 மெகாவாட்ஸ் திறனுடையது என்றும், மிதாப்பூரில் உள்ள தங்கள் நிறுவனத்திற்கு சொந்தமான கெமிக்கல் பிளாண்டின் உள்ளேயே இது அமைக்கப்பட உள்ளதாகவும், இதன்மூலம் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க உள்ளதாகவும், சமீபத்தில் பத்திரிகைக்கு பேட்டியளித்த டாடா குழும தலைவர் ரத்தன் டாடா கூறுகையில், குஜராத்தில் அதிக அளவு முதலீடு செய்ய இருப்பதாகவும், அதுபோல புதிய தொழிற்சாலைகள் துவங்க உள்ளதாகவும் அதில் கூறியிருந்தார். அவர் கூறியது போலவே, மேற்குவங்க மாநிலம் சிங்குரில் செயல்பட்டு வந்த நானோ கார் தொழிற்சாலை, குஜராத் மாநிலம் சனந்திற்கு மாற்றப்பட்டது. அதுபோல தற்போது சோலார் போட்டோவோல்டாயிக் பிளாண்டையும் அமைக்க முன்வந்துள்ளது. இதுமட்டுமல்லாமல், 5 மெகாவாட்ஸ் ஜியோதெர்மல் பிளாண்டை குஜராத்தில் அமைக்க திட்டமிட்டுள்ளது எனவும் அதில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.
Leave a Reply