ஹாக்கின்ஹெய்ம் : தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், பார்முலா ஒன் கார் பந்தய முன்னணி அணியான ரெட் புல் அணியடன் 5 ஆண்டு கால அளவிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, ரெட் புல் அணியின் கார்கள், டிரைவரின் உடைகள் மற்றும் ஹெல்மெட் வைசர்களின் எல்ஜி நிறுவன லோகோ இடம்பெறும். ரெட் புல் அணி, இந்த சீசனில் நடைபெற்ற 10 போட்டிகளில், 5 போட்டிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தென்கொரியாவில் முதல்முறையாக கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகள் வரும் அக்டோபர் மாதத்தில் நடைபெற இருப்பதாகவும், இதற்கான பணிகளில் எல்ஜி நிறுவனம் துரிதமாக ஈடுபட்டு வருவதாகவும், இந்த கிராண்ட் பிரிக்சில், எல் ஜி நிறுவனத்துடனான பங்களிப்பு அதிகமாக இருக்கும் என்று எல்ஜி நிறுவன மார்க்கெட்டிங் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply