விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடித்தவர் மரணம்

posted in: உலகம் | 0

சிட்னி: விமான விபத்து [^]க்கான காரணத்தைக் கண்டுபிடிக்க உதவும் பிளாக் பாக்ஸ் எனப்படும் கருப்புப் பெட்டியை கண்டுபிடித்த டேவிட் வாரன் (85) காலமானார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவரது தந்தை 1953ம் ஆண்டில் விமான விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இதையடுத்து, விமான விபத்திற்கான காரணத்தை கண்டறிய உதவும் வகையில் கருப்புப் பெட்டியை வாரன் தயாரித்தார்.

முதலில் விமானிகள் மற்றும் விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு இடையே நடக்கும் உரையாடல்களைப் பதிவு செய்யும் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டரைத் தான் வாரன் உருவாக்கினார்.

பின்னர் அதில் விமானம் [^] பறக்கும்போது முக்கிய கருவிகளின் செயல்பாட்டையும் பதிவு செய்யும் பிளைட் டேட்டா ரெக்கார்டரும் சேர்க்கப்பட்டு முழுமையான பிளாக் பாக்ஸ் உருவாக்கப்பட்டது.

பின்னர், விமானம் எப்படிப்பட்ட விபத்தில் சிக்கினாலும், கடலில் விழுந்தாலும் கூட இந்தப் பெட்டி சேதமடையாத வகையில் அதன் பாதுகாப்பு கவசம் உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அதை கண்டுபிடிக்க உதவும் டிரான்ஸ்மிட்டர்களும் இணைக்கப்பட்டன.

1952ம் ஆண்டு ஆஸ்திரேலியா வின் மெல்போர்ன் நகரில் உள்ள விமானவியல் ஆராய்ச்சி மையத்தில் பாதுகாப்புத்துறை விஞ்ஞானியாக வாரன் பணியில் சேர்ந்தார். அங்கு தான் இந்த கருப்புப் பெட்டியை அவர் உருவாக்கினார்.
வாரனுக்கு ருத் என்ற மனைவியும் 4 மகன்களும் உள்ளனர்.
Read: In English
இவர் 1953ம் ஆண்டிலேயே கருப்புப் பெட்டியை உருவாக்கிவிட்டாலும் விமானங்களில் அதன் பயன்பாடு 1957ல் தான் முதல் முதலாக நடைமுறைக்கு வந்தது.

1960ல் விமானங்களில் பிளாக் பாக்ஸை கட்டாயப்படு்த்திய முதல் நாடு ஆஸ்திரேலியா தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *