கோலாலம்பூர்: பயங்கரவாத நடவடிக் கைகளைத் தடுக்க 50க்கும் மேற்பட்ட திட்டங் களை மலேசிய அரசு உருவாக்கியுள்ளது. இதில், வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு வரும் நபர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறது.
பயங்கரவாத நடவடிக் கைகளைத் தடுப்பதற்காக ஒரு அமைப்பை உருவாக்கி மலேசிய அரசு ஆய்வு செய்தது. அந்நாட்டு புலனாய்வு அமைப்பு அளித்த பரிந்துரையின் பேரில், 50க்கும் மேற்பட்ட திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதம் அதிகமுள்ள நாடுகளைச் சேர்ந்தவர்களை மலேசியாவில் நுழைய அனுமதிப்பதை தவிர்த்தல், வெளிநாடுகளிலிருந்து பணிக்காக ஆட்களை தேர்வு செய்வதை தடுத்தல், தற்போதுள்ள வெளிநாட்டு வேலையாட்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகளில் மலேசிய அரசு ஈடுபட்டுள்ளது. இது குறித்து விரிவாக விவாதிப்பதற்காக, அடுத்த மாதம் 2ம் தேதி துணைப் பிரதமர் முகைதீன் யாசீன் தலைமையில் அமைச்சரவை கூடுகிறது. வெளிநாட்டு வேலையாட்களை தேர்வு செய்யும் நிறுவனங்களுக்கு, அடுத்த ஆண்டு முதல் கூடுதல் வரி விதிக்கவும் முடிவு செய்ய பட்டுள்ளது. உள்நாட்டு பணியாளர்களை தேர்வு செய்யும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. இதன் மூலம் போதை கடத்தல், விபசாரம், பயங்கரவாதம் போன்ற நடவடிக்கைகளை தடுக்க, மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.
Leave a Reply