மும்பை : இந்த நிதியாண்டில், 30 ஆயிரம் பேரை புதிதாக பணியமர்த்த திட்டமிட்டுள்ள டாடா கன்சல்டன்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. டாடா நிறுவனத்தின் வருடாந்திர கூட்டுக்குழு கூட்டம் மும்பையில், டாடா நிறுவன தலைவர் ரத்தன் டாடா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரத்தன் டாடா கூறுகையில், இந்த ஆண்டில் , புதிதாக 30 ஆயிரம் பேரை பணியமர்த்த உள்ளதாகவும், இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான, தஙகள் டாடா கன்சல்டன்சி சர்வீசில் (டிசிஎஸ்) 1,60,000 ஊழியர்கள் பணிபுரிவதாவும், கடந்த ஆண்டில், 16,851 பேர் பணியமர்த்தப்பட்டதாகவும் தெரிவித்தார். சர்வதேச அளவில் டிசிஎஸின் நிலை குறித்து ரத்தன் டாடா கூறுகையில், வருவாய் அடிப்படையில் 9வது இடமும், லாபமீட்டுதலில 6வது இடமும், பங்குச்சந்தையில் முதலீடு மற்றும் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை அடிப்படையில் 4வது இடத்திலும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
Leave a Reply