புதுடில்லி : இந்தியாவில் வளர்ந்து வரும் மொபைல் நிறுவனமான ஜென் மொபைல் நிறுவனம், புதிய 72 நாட்கள் நீடிக்கக்கூடிய பேட்டரியுடன் கூடிய மொபைலை அறிமுகப்படுத்துகிறது.
இதுதொடர்பாக, அந்நிறுவனம் வெளியி்ட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இந்த போட்டி உலகில், சவால்களை சமாளிக்க பல புதுமைகளை புகுத்துவதன் மூலம் தாங்களும் நிலையான இடத்தை பிடிக்க இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்25 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மொபைல் போன், டுயல் சிம்களைக் கொண்டது என்றும், பல்வேறு 1.3 மெகாபிக்சல் கேமரா, 2.4 இன்ச் டிஎப்டி திரை உள்ளிட்ட மல்டிமீடியா தொழில்நுட்பங்களை கொண்ட இந்த போனின் விலை 3,400 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply