குறைந்த விலையில் மருந்து தயாரிக்க இந்தியா – இங்கிலாந்து ஒப்பந்தம்

புதுடில்லி : மக்கள் வாங்கக்கூடிய விலையில் முக்கியமான மருந்துகளை தயாரிப்பதற்கான கூட்டு முயற்சிக்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் கையெழுத்திட்டுள்ளன.

45 மில்லியன் பவுண்ட் கூட்டாண்மைத் திட்டத்தில் இந்தியாவின் உயிரியில் தொழில்நுட்பத் துறையும், இங்கிலாந்தின் வெல்கம் டிரஸ்ட்டும் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் விவரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அறிவியல் – தொழில்நுட்ப அமைச்சர் பிரதிவிராஜ் செளஹான், “ இரு நாடுகளிலும் உள்ள பொதுத் துறை மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றிவரும் ஆய்வாளர்களைக் கொண்டு மிகவும் பயன்படத்தக்க மருத்துவக் கருவிகளை உருவாக்குவது, நோய் அறியும் மருத்துவக் கருவிகளை அமைப்பது, பல கொடிய நோய்கள் வராமல் தடுக்கும் தடுப்பு மருந்துகளை மக்கள் வாங்கும் விலையில் தயாரித்து விற்பது ஆகியனவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த கூட்டு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது” என்று கூறியுள்ளார். இது மட்டுமின்றி, இந்தியாவில் நிலவும் நகர, கிராம்ப்புற இடைவெளியை தொழில்நுட்ப உதவியுடன் நீக்குவதற்கான ஆய்வுத் திட்டங்கள் குறித்தும் அமைச்சர் செளஹானும், இங்கிலாந்து நாட்டின் அறிவியல் மற்றும் பல்கலை அமைச்சர் டேவிட் வில்லட்ஸூம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *