சென்னை : ரயில்வே பணிகளுக்கு
தரம் குறைவான இயந்திரம் வாங்கியதில் இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், ரயில்வே அதிகாரிகளுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை சி.பி.ஐ., கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
அரக்கோணத்தில் உள்ள தெற்கு ரயில்வே உதவி மண்டல பொறியாளர் சுந்தர், முதுநிலை பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர், ஒப்பந்ததாரர் மணியுடன் சேர்ந்து கடந்த 2002 – 03 ஆண்டு காலகட்டத்தில், ரயில்வே நிர்வாகத்தை மோசடி செய்ததாக சி.பி.ஐ.,யின் லஞ்ச ஒழிப்பு பிரிவு வழக்கு பதிவு செய்தது.அதிகாரிகள் இருவரும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, ஒப்பந்த நிபந்தனைகளை மீறி, தரக்குறைவான கல் உடைக்கும் இயந்திரம் வாங்கியதில் ரயில்வே நிர்வாகத்திற்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.இந்த வழக்கை, சி.பி.ஐ., வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதி ஜெயபாலன் விசாரித்தார். ரயில்வே அதிகாரிகள் சுந்தர், வெங்கடேசனுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
Leave a Reply