இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப், விரைவில் தன் புதிய கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் என்றும், பாகிஸ்தான் திரும்பும் தேதியையும் அவர் கூறுவார் என்றும் அவரது கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் அதிபராக இருந்தவர் பர்வேஸ் முஷாரப். அவர் தற்போது பாகிஸ்தானில் இல்லை. வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார். வெளிநாட்டில் இருந்த படியே தன் ஆதரவாளர்கள் உதவியுடன் அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (ஏ.பி.எம்.எல்.,) என்ற கட்சியை ஆரம்பித்துள்ளார். அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சவுத்ரி ஷாபஸ் உசேன், “அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்பாக எப்போது வருவார் என்பதை முஷராப் விரைவில் அறிவிப்பார்’ என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கின் மூன்று பிரிவுகளும் கூட்டணி அமைத்துள்ளன. அக்கூட்டணி அழைத்தால் ஏ.பி.எம்.எல்., அதில் இடம் பெறும் என்றும் சவுத்ரி தெரிவித்தார்.
Leave a Reply