இங்கிலாந்து மின்வாரியத்துடன் கைகோர்க்கிறது விப்ரோ டெக்

பெங்களூரு : இந்தியாவின் முன்னணி தகவல்தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனமான விப்ரோ டெக்னாலஜீஸ் நிறுவனம், இங்கிலாந்தின் மின்பகிர்வு வழங்கும் நிறுவனமான எலக்டரிசிட்டி நார்த் வெஸ்‌ட்டுடன் ‌கைகோர்க்கிறது.

இதுகுறித்து, விப்ரோ டெக்னாலஜீஸ் மற்றும் எலெக்டரிசிட்டி நார்த் வெஸ்ட் நிறுவனங்கள் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இதற்காக இரண்டு நிறுவனங்களும் 5 ஆண்டுகள் இணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், இதன்மூலம், இங்கிலாந்தில் தகவல்தொழில்நுட்ப (ஐடி) நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் தங்கு‌தடையின்றி கிடைக்கும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *