மும்பை: நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் ஓபாமா இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். சுற்றுப்பயணத்தின் போது அவர் மும்பையில் தாஜ் ஓட்டலில் தங்க உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனைமுன்னிட்டு நவம்பர் மாதம் 5 மற்றும் 6ம் தேதிகளில் இந்த ஓட்டல்களில் உள்ள 604 அறைகளும் புக் செய்யப்பட்டுவிட்டது. ஓபாமாவுடன் அவரது மனைவி மற்றும் அவரது பிரத்யேக சமையல்கலைஞர்கள், மற்றும் உயர்அதிகாரிகள் தங்க உள்ளனர். இதனால் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் யாரும் இந்த தேதிகளில் இந்த ஓட்டல்களில் தங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் மும்பையில் மணிபவன் மற்றும் நரிமான் ஹவுஸ் போன்ற பகுதிக்கு செல்ல இருப்பதால் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply