ராஜபக்ஷேயை எதிர்த்த மனு :பொன்சேகா முயற்சி தோல்வி

posted in: உலகம் | 0

கொழும்பு : அதிபர் தேர்தலில் ராஜபக்ஷே வெற்றி பெற்றதை எதிர்த்து, ராணுவ முன்னாள் தளபதி பொன்சேகா தாக்கல் செய்த மனுவை, இலங்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

இலங்கையில் இந்தாண்டின் துவக்கத்தில் நடந்த அதிபர் தேர்தலில், ராஜபக்ஷே வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா தோல்வி அடைந்தார்.

தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக ராஜபக்ஷேவுக்கு எதிராக, பொன்சேகா புகார் தெரிவித்தார். அவரது வெற்றியை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில், பொன்சேகா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜபக்ஷேவுக்கு எதிராகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என கூறி, அந்த மனுவை தள்ளுபடி செய்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *