மதுரை : சத்துணவு மற்றும்
அங்கன்வாடியில் பணிபுரியும் பி.எட்., முடித்த நால்வரை ஆசிரியர் பணிக்கான தேர்வில் பங்கேற்க அனுமதிக்கும்படி, தேர்வாணையத்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
புதுக்கோட்டை, மேலநிலைப்பட்டியைசேர்ந்த மாரியப்பன் உட்பட நால்வர் தாக்கல் செய்த ரிட் மனு: அரிமளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நடுநிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிகிறேன்; பி.எட்., முடித்துள்ளேன். ஏற்கனவே அரசு, சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் பி.எட்., முடித்தவர்களை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்வதாக அறிவித்தது. இதற்கான தேர்வை, ஆசிரியர் தேர்வாணையம் நவ., 21ல் நடத்தவுள்ளது. இதற்கு சத்துணவு, அங்கன்வாடியில் பங்கேற்கும் 343 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் வணிகவியல் முடித்த 41 பேருக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. பி.எட்., முடித்த அனைவரையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. நீதிபதி கே.சந்துரு, “”மனுதாரர்களை தேர்வு எழுத ஆசிரியர் தேர்வாணையம் அனுமதிக்க வேண்டும். தேர்வு முடிவுகளை மனு மீதான இறுதி தீர்ப்பு வரும் வரை வெளியிடக்கூடாது,” என்றார்.
Leave a Reply