ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண விபரங்களை அரசின் இணையதளத்தில் பார்த்து கட்டணத்தை செலுத்தலாம் என கலெக்டர் சவுண்டையா கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தனியார் பள்ளிகளுக்கான கல்விக்கட்டணம், தமிழக அரசின் www.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு செலுத்த வேண்டிய கல்வி கட்டண விபரங்களை அரசின் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு தனியார் பள்ளிகளுக்கும் அரசு நிர்ணயித்துள்ள கட்டண விபரங்களை இணையதளத்தில் பார்த்து அதற்கான கட்டணத் தொகையை செலுத்தலாம்.
Leave a Reply