துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக இந்தியா உருவெடுத்துள்ளது. 2010ம் ஆண்டின் முதல் பாதி ஆண்டின் வர்த்தகப் பரிவர்த்தனை விவரங்களின்படி இது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து எமிரேட்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், நடப்பு ஆண்டின் முதல் பாதியில், எமிரேட்ஸுடன்தான் மிகப் பெரிய அளவில் வர்த்தகம் [^] செய்துள்ளது இந்தியா. இதன் மூலம் இந்தியாவின் மிகப் பெரும் வர்த்தகப் பங்காளியாக எமிரேட்ஸ் உருவெடுத்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான எண்ணை அல்லாத வர்த்தகப் பரிவர்த்தனையின் அளவு நடப்பு ஆண்டின் முதல் பாதியில் 57 சதவீதமாக அதிகரித்து 20.4 பில்லியன்டாலராக இருந்தது.
மேலும் இந்தியாவுக்கான எண்ணை அல்லாத ஏற்றுமதியின் அளவு 75 சதவீதம் அதிகரித்து, முதல் பாதியில் 4 பில்லியன் டாலராக இருந்தது.
2010ம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பரிவர்த்தனை 32.7 பில்லியன் டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பரிவர்த்தனையின் அளவு 29.4 பில்லியன் டாலராக இருந்தது.
கடந்த 2007ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்தியர்கள் [^] செய்திருந்த முதலீடுகளின் அளவு 2.5 பில்லியன் டாலராக இருந்தது. இது அந்த நாட்டின் நேரடி அன்னிய முதலீடுகளில் 7 சதவீதமாகும்.
அதேபோல கடந்த ஆண்டு இந்தியாவில் எமிரேட்ஸ் நிறுவனங்கள் செய்திருந்த முதலீடுகளின் அளவு 1.5 பில்லியன் டாலராக இருந்தது. இது அடுத்த ஆண்டு 1.9 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் விசேஷம் என்னவென்றால், இந்தியாவில் பெருமளவில் முதலீடு செய்துள்ள ஒரே அரபு நாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்பதுதான்.
Leave a Reply