பெங்களூரு : இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம், 9.4 சதவீதம் என்ற அளவில் இருப்பதாக இந்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இந்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம், தேசிய அளவில், 300 மாவட்டங்களில் 15 வயதிலிருந்து 59 வயதிற்குட்பட்ட 45,859 பேரிடம் நடத்த கருத்துக்கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்தாண்டின் மார்ச் மாதம் வரையிலான கருத்துக்கணிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி, இந்தியாவில், வேலையில்லாத் திண்டாட்டம், 9.4 சதவீதமாக இருப்பதாகவும், கிராமப்புற பகுதிகளில் 10.1 சதவீதமாக உள்ளதாகவும், நகர்ப்புறங்களில் 7.3 சதவீதமாக உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மக்கள் தொகையில், 1000 பேரில் 163 பேர், சமூக அளவில் பாதுகாப்பு அம்சங்களை பெறும் நோக்கிலேயே பணிக்குச் செல்வதாக அந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
Leave a Reply