ஈரோடு : ஈரோடு மஞ்சள் சந்தையில், ஒரே நாளில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. ஆயிரம் முதல் 1,200 வரை உயர்ந்து விலையில் சாதனை படைத்து, தற்போதைய அளவில் மஞ்சள் குவிண்டால் ரூ. 16,172 ஆக உள்ளது.
இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் சங்க தலைவர் ரவிசங்கர் வெளியி்ட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : இந்த திடீர் விலை உயர்வு விவசாயிகளை மகிழ்ச்சியடையச் செய்திருந்தாலும், பொதுமக்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வார முடிவில், குவிண்டால் ரூ. 15 ஆயிரத்திற்கு வர்த்தகமான மஞ்சள், திங்கள் கிழமை காலை வர்த்தகத்தினிடையே ஆயிரம் ரூபாய் அதிகரித்து ரூ. 16,172 ஆக விலையை நிர்ணயித்து, ரூ. 16,500 வரை விவசாயிகள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார். இன்றைய நாள்(தி்ங்கட்கிழமை). விவசாயிகளுக்கு பெருமகிழ்ச்சி தரக்கூடிய நாளாக இருந்ததாகவும், இந்த விலை உயர்வு இன்னும் ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Leave a Reply