வாஷிங்டன் : ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்
கிடைப்பது சிரமம் என, ஒபாமா தெரிவித்துள்ளார்.
நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வரும் ஒபாமா, வாஷிங்டனில் அளித்த பேட்டி: இந்தியா -அமெரிக்கா நாடுகளுக்கிடையே, நல்ல உறவுமுறைகளை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும் என்பது எங்களது முக்கிய கொள்கைகளில் ஒன்று. இந்திய பயணத்தின் மூலம், பிரதமர் மன்மோகன் சிங்குடன் பல்வேறு முக்கிய விவகாரங்களைப் பற்றி விவாதிப்பதற்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரை ஆசியாவின் தவிர்க்க முடியாத நட்பு நாடாக இந்தியா திகழ்கிறது. இரட்டை தொழில்நுட்ப உபகரணங்களின் மீதான ஏற்றுமதி தடை நீக்கம் மற்றும் ஐ.நா., பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் போன்ற கேள்விகளுக்கு பதில் அளிப்பது கடினம். இந்திய ஜனநாயக முறையில் எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அணு சக்தி உற்பத்திக்கு தேவைப்படும் எல்லாவற்றையும் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவிலிருந்து இந்தியா பெற்றுக் கொள்ளலாம். அணு உலை விபத்து நஷ்டஈடு மசோதா தொடர்பான எங்கள் நிலை குறித்து இந்திய அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும். இப்பிரச்னை குறித்து இருநாடுகளும் கலந்து பேசி தீர்வு காண வேண்டும். இவ்வாறு ஒபாமா கூறினார்.
Leave a Reply