புதுடில்லி : காற்றாலை மின் உற்பத்தியில், தேசிய அளவில் முன்னணியில் உள்ள முத்தூட் பப்பாச்சன் குழுமம் (எம்பிஜி) நிறுவனம், 2012ம் ஆண்டிற்குள் காற்றாலை மின் உற்பத்தியை இரண்டு மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, முத்தூட் பப்பாச்சன் குழும நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான தாமஸ் ஜான் முத்தூட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : தங்கள் நிறுவனத்திற்கு, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி இடங்களில் காற்றாலைகள் உள்ளதாகவும், இந்த நிதியாண்டில், இந்த காற்றாலைகள் மூலம், 450 லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்து தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply