சென்னை : தென் இந்தியாவின் டெட்ராய்டாக மாறிவரும் சிங்காரச் சென்னையில், தங்கள் நிறுவனமும் கால்பதிக்கும் பொருட்டு, சென்னையை அடுத்த செய்யாரில் உற்பத்தி யூனிட் அமைக்க உள்ளதாக மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக , மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவன உயர் அதிகாரி எம். வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : சென்னை அடுத்த செய்யாரில் அமைக்கப்பட உள்ள யூனிட்டில், 3 சக்கர வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்கள் தயாரிக்கப்பட உள்ளதாகவும், தற்போதைய அளவில், ஆண்டு ஒன்றுக்கு 1.3 மில்லியன் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும், மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம் ஆண்டிற்கு 1.4 மில்லியன் கார்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இது சாத்தியமாகும் நிலையில், தங்களது நிறுவனம் நிமிடத்திற்கு 3 கார்களை உற்பத்தி செய்யும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஹூண்டாய், நிசான் மோட்டார், ரெனால்ட, பிஎம்டபிள்யூ, போர்டு உள்ளிட்ட நிறுவனங்கள் கார் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் தங்கள் நிறுவனம், இவர்களை முந்தி முன்னணி இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
NIJAM
மகிந்திரா & மகிந்திரா
தங்கள் தமிழ் நாட்டில் மஹிந்திரா & மஹிந்திரா அமைப்பை
துவங்க முன் வந்துள்ளது பாராட்டக்குரியது,
இதனால் தமிழ் நாட்டில் வேலை இல்லஎ திண்டாட்டம்
ஒழிய உறுதுனைய இறுக்கும்
சமுதாய வளர்ச்சில்
நிஜாம் – அச்சுதமங்கலம்