சென்னை: அண்ணா பல்கலைக்கழக பகுதி நேர பி.இ., – பி.டெக்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், டிச. 7 முதல் 10ம் தேதி வரை நடக்கிறது.
டிசம்பர் 7ம் தேதி அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் கவுன்சிலிங் நடக்கிறது. சிவில் பொறியியல் படிப்பிற்கு 8ம் தேதி காலை 9 மணிக்கும், வேதியியல் பொறியியல் படிப்பிற்கு மதியம் 2 மணிக்கும், பிரின்டிங் பொறியியல் படிப்பிற்கு மதியம் 3 மணிக்கும் கவுன்சிலிங் நடக்கிறது.
மெக்கானிக்கல் பொறியியல் படிப்பிற்கு 9ம் தேதியும், எலக்ட்ரிக்கல் பொறியியல் படிப்பிற்கு 10ம் தேதியும் கவுன்சிலிங் நடக்கிறது. அண்ணா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை மையத்தில், இக்கவுன்சிலிங் நடைபெறும். தகுதியுள்ள மாணவர்களுக்கு, கவுன்சிலிங்கிற்கான அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கவுன்சிலிங் அழைப்பு கடிதம் கிடைக்காதவர்கள், கவுன்சிலிங் அட்டவணை அடிப்படையில் உரிய சான்றிதழ்களுடன் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம்.
கவுன்சிலிங் பற்றிய முழு விவரங்களை, அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் ( www.annauniv.edu ) தெரிந்து கொள்ளலாம். மேலும் 044-22358314 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Leave a Reply