மும்பை : சென்ற அக்டோபர் மாதத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்ட முதலீடு 642 கோடி டாலராக (ரூ.28,890 கோடி) உயர்ந்துள்ளது.
பங்குச் சந்தை வரலாற்றில், ஒரே மாதத்தில் அன்னிய நிதி நிறுவனங்கள் இந்த அளவிற்கு முதலீட்டை மேற்கொண்டுள்ளது இதுவே முதல் முறையாகும். சென்ற 2009-ஆம் ஆண்டில் அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களின் பங்குகளில் 1,745 கோடி டாலர் (ரூ.78,525 கோடி) முதலீடு செய்து இருந்தன. நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் 9.44 கோடி டாலர் மதிப்பிற்கு பங்குகளை விற்பனை செய்தன. இதன் பிறகு மே மாதம் நீங்கலாக, அனைத்து மாதங்களிலும் இந்நிறுவனங்களின் பங்கு முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நடப்பு 2010-ஆம் ஆண்டில், இதுவரையிலான காலத்தில், இந்நிறுவனங்களின் பங்கு முதலீடு வரலாறு காணாத அளவில் 2,479 கோடி டாலராக (ரூ.1,11,555 கோடி) உயர்ந்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி நன்றாக உள்ளது. இந்திய நிறுவனங்களின் பங்குகளில் மேற்கொள்ளும் முதலீட்டிற்கு அதிக ஆதாயம் கிடைக்கிறது. இதனால், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீட்டில் எழுச்சி ஏற்பட்டு வருகிறது.
Leave a Reply