சென்னை : இந்தியாவின் முன்னணி தகவல்தொழில்நுட்ப நிறுவனமான டாடா டெலிசர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம், இந்த நிதியாண்டில் புதிதாக 50 ஆயிரம் பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, டிசிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி திருப்திகரமாக இருப்பதாகவும், அதற்கேற்றாற் போல, நிறுவனங்களும் வளர்ச்சிப்பாதையில் இயங்கி வருவதாகவும், எல்லா நிறுவனங்களும் ஆட்கள் பணியமர்த்தலில் அதிகமாக ஈடுபட்டு வருவதாகவும், அதன்படி, இந்த நிதியாண்டில், புதிதாக 50 ஆயிரம் பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், இதே நிலை அடுத்தாண்டும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply