பெற்ற பிள்ளையை கழுத்தை நெரிப்பார்களா ? இலவச மின்சாரம் ரத்தாகாது : கருணாநிதி அறிவிப்பு

posted in: அரசியல் | 0

சென்னை: தமிழகத்தில் இலவச மின்சார திட்டம் ரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சட்டசபையில் முதல்வர் கருணாநிதி இன்று அறிவித்தார்.

இன்று காலை சபை துவங்கியதும் அ.தி.மு.க., காங்., பா.ம.க., கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பால் கொள்முதல் விலை, இலவசமின்சாரம், கரும்புவிலை நேற்றைய விவசாயிகள் கைது உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பினர்.

இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டு வந்தனர். எம்.எல்.ஏ.,க்கள் அன்பழகன் ( அ.தி.மு.க.,) விடியல் சேகர் ( காங்.,), ஜி.கே.மணி(பா.ம.க.,), டில்லி பாபு (மார்க்., கம்யூ., ) ஆகியோர் எழுந்து பேசினர். இதற்கு அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி பதில் அளித்து பேசுகையில் இலவச மின்சார திட்டம் ரத்து செய்யப்படாது. மின் மீட்டரும் பொருத்தப்பட மாட்டாது. என்றார்.

மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்., நேரு.,கூறுகையில் ; போக்குவரத்து துறையில் பெண்கள் டிரைவராகவும், கன்டெக்டரும் நியமிக்கப்பட மாட்டார்கள் என்றார்.

முதல்வர் கருணாநிதி பேச்சு விவரம் : தொடர்ந்து பேசிய முதல்வர் கருணாநிதி கூறியதாவது:

இலவச மின்சாரம் தொடர்பாக சில அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அரசியல் ஆதாயத்திற்காக சில அரசியல் கட்சியினர் கூறியதை நம்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் போராட்டம் மறியல் என அறிவித்ததால்தான் 196 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஆட்சியாளர்கள்: உறுப்பினர்கள் கோரிக்கையின்படி நேற்று கைது செய்யப்பட்ட 196 விவசாயிகளும் விடுதலை செய்யப்படுவர். கடந்த ஆட்சியாளர்கள், போராட்டக்காரர்களை எப்படி அடக்கினர் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போதும் , எப்போதும் இலவச மின்சார திட்டம்ரத்தாகாது. ஏனெனில் இந்த திட்டத்தை கொண்டு வந்ததே நாங்கள்தான். நாங்கள் பெற்ற பிள்ளையை நாங்களே கழுத்தை நெரித்து விட மாட்டோம். பல் கொள்ளுமுதல் விலை தொடர்பாக இரு தரப்பினரையும் அழைத்து பேசி முடிவு எடுக்கப்படும் . இவ்வாறு முதல்வர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *