தூத்துக்குடி : “”நாட்டில் மனிதாபிமானம் அடியோடு அழிந்து வருவதாக”, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, கவலை தெரிவித்தார்.
கோவில்பட்டி அடுத்த குருமலையில், நேற்று மாலை அக்கட்சி கொடிப்பயணத்தை துவக்கி வைத்த வைகோ பேசியதாவது: நான் மத நம்பிக்கைகளை மதிப்பவன். அதேநேரம், ஈ.வெ.ரா., கொள்கையிலும் பற்றுக் கொண்டவன். தமிழக கோவில்களிலுள்ள சிற்பங்கள் அழகானவை. விவசாயம் சரியாக நடக்காமல், பலர் விளைநிலங்களை விற்றுவிட்டதால் உணவுப்பஞ்சம் வரப்போகிறது. தற்போது, நாட்டில் மனிதாபிமானம் அடியோடு அழிந்துவருகிறது. பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், சமுதாயத்தில் ஒழுக்கம், பண்பாடு நாசமாகிவருகிறது. தமிழக மக்கள் முன்னேற்றத்திற்காக என்றென்றும் ம.தி.மு.க., பாடுபடும், என்றார். மாவட்ட செயலர் ஜோயல், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, சுற்றுப்புற கிராமங்களில் கொடிப்பயணம் மேற்கொண்டார்.
Leave a Reply