புது தில்லி, நவ. 1: மருந்து உற்பத்தி துறையில் அன்னிய முதலீட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்களை பன்னாட்டு நிறுவனங்கள் கையகப்படுத்துவதால் உள்நாட்டு மருந்து தேவையில் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு உருவாகக்கூடும்.
எனவே, மருந்து உற்பத்தி துறையில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக புதிய விதிகள் வரையறுக்கப்பட வேண்டும் என்று அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தனியாக கடிதம் எழுதியுள்ளது.
Leave a Reply