யாழ். நாவற்குழி பிரதேசத்தில் சிங்கள மக்கள் தங்கியுள்ள காணிகளை பலவந்தமாக கைப்பற்றுவதற்கு முயற்சிக்கப்பட்டு வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
1983ம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட சிங்களக் குடும்பங்கள் தற்போது நாவற்குழி பிரதேசத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை பலவந்தமாக வெளியேற்றுவதற்கு தமிழ்க் குடும்பங்கள் முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
50 தமிழ் குடும்பங்கள் குறித்த பிரதேசத்திற்கு வந்து தமது காணிகளை கைப்பற்ற முயற்சித்ததாக யாழ்ப்பாண சிங்கள மக்கள் அமைப்பின் தலைவி எச்.கே.கே. குமாரி சகுந்தலா தெரிவித்துள்ளார்.
88 சிங்களக் குடும்பங்கள் நாவற்குழி பிரதேசத்தில் தங்கியிருப்பதாகவும், அடிப்படை வசதிகள் எதுவும் இன்னமும் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாவற்குழி பிரதேசத்தில் தங்கியிருக்கும் சிங்களக் குடும்பங்களுக்கு அரசாங்கம் உதவிகளை வழங்கத் தவறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
Leave a Reply