தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், கொலை, கொள்ளை, கடத்தல் சம்பவங்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், தே.மு.தி.க. சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் 22 ஊராட்சி ஒன்றியங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. வருகிற 16-ந்தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-
கோலியூனூர்- பொருளாளர் ஆர்.சுந்தராஜன், தியாகதுருகம்-தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, கள்ளக்குறிச்சி- கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார், உளுந்தூர்பேட்டை-துணை செயலாளர் ஆஸ்டின், சின்னசேலம்-துணை செயலாளர் இளங்கோவன், காணை-துணை செயலாளர் கராத்தே சுரேஷ்.
சங்கராபுரம்-துணை செயலாளர் முருகேசன், ரிஷிவந்தியம்-தேர்தல் பணி செயலாளர் பாண்டிய ராஜன், திருவெண்ணை நல்லூர்-தேர்தல் பணி செயலாளர் அக்பர், திருநா வலூர்-தேர்தல் பணி செயலாளர் வீரப்பன், கண்ட மங்கலம்-தேர்தல் பணி செயலாளர் ஜெகவீர பாண்டியன், செஞ்சி- கொள்கை பரப்பு துணை செயலாளர் பாஸ்கரன், மயிலம்-கொள்கை பரப்பு துணை செயலாளர் புலவர் கதிரவன்.
முகையூர்-மாநில மாணவரணி செயலாளர் செந்தூ ரேஸ்வரன், வானூர்-மாநில தொழிற்சங்க பேரவை தலைவர் வேல்முருகன், வல்லம்- மாநில தொழிற் சங்க பேரவை துணை செயலாளர் ஈஸ்வரன், மேல் மலையனூர்-மாநில வர்த்தக அணி துணை செயலாளர் சவுந்திரபாண்டியன், ஒலக்கூர்-மாநில வக்கீல் அணி துணை செயலாளர் தட்சிணாமூர்த்தி, திருக் கோவிலூர்-மாநில ஆசிரியர் பட்டதாரி அணி செயலாளர் பேராசிரியர் ரவீந்திரன், கல்வராயன் மலை-மாநில ஆசிரியர் பட்டதாரி அணி துணை செயலாளர் ராஜமன்னன், மரக்காணம்-மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் ராஜேந்திரநாத், விக்கிரவாண்டி- முன்னாள் அமைச்சர் தாமோதரன்.
விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் கோலியனூர் ஒன்றியத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறார்.
கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொது மக்களும் இதில் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெற செய்ய கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply