புதுடில்லி: இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளுள் ஒன்றான ஐடிபிஐ 0.5 சதவீதம் வட்டி வீதத்தை உயர்த்தியுள்ளது. ரிசர்வ் வங்கி வங்கி வட்டி வீதங்களை உயர்த்தி சில மணி நேரங்களில் இந்த வட்டி வீத உயர்வை ஐடிபிஐ அறிவித்துள்ளது.
வீட்டுக்கடன்களுக்கான வட்டிகளையும் கடுமையாக உயர்த்தியுள்ளது. அதிகபட்ச வீட்டுக் கடன்களுக்கு 0.75 முதல் 1 சதவீதம் வரை வட்டி வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி கால் சதவீதம்தான் வட்டியை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. பல்வேறு வைப்புத் தொகைகளுக்காக தரும் வட்டி வீதங்களையும் உயர்த்தப் போவதாக ஐடிபிஐ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் மற்ற பொதுத்துறை வங்கிகள் உடனடியாக வட்டியை உயர்த்தும் திட்டத்தில் இல்லை என்று தெரிவித்துள்ளன. ஐசிஐசிஐ வங்கியும் உடனடியாக வட்டியை உயர்த்தமாட்டோம் என அறிவித்துள்ளது. ஆனால் அனைத்து வங்கிகளின் முதன்மை கடன் வழங்கலுக்கான வட்டிகள் 25 புள்ளிகள் உயர்ந்துள்ளன.
Leave a Reply