புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி குறித்து நடைபெற்று வரும் விசாரணை தொடர்பான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில். சி.பி.ஐ., நேற்று தாக்கல் செய்தது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த மோசடி குறித்து, மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. அதே நேரத்தில், இந்தப் பிரச்னை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. கடந்த 25ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் குளறுபடிகள் நடந்துள்ளதாக, ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் அறிக்கை சமர்ப்பித்தும், தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராஜாவிடமும், தொலைத் தொடர்புத் துறை செயலரிடமும் சி.பி.ஐ., விசாரணை நடத்தாதது ஏன் என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் பிரச்னை தொடர்பாக தாங்கள் நடத்தி வரும் விசாரணையின் தற்போதைய நிலை அறிக்கையை சி.பி.ஐ., நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. இன்று ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணைக்கு வரும் போது, அதுபற்றி நீதிபதிகள் பரிசீலிப்பர்.
Leave a Reply