அறிவியல் படிப்புகளுக்கான உதவித் தொகைகள்

posted in: கல்வி | 0

கே.வி.பி.ஒய். என்று சுருக்கமாக அழைக்கப்படும் “கிஷோர் வைக்யானிக் ப்ரோட்சஹான் யோஜனா” உதவித்தொகை வருடாவருடம் அறிவியல் மாணவர்களுக்கு வழங்கப்படுவதாகும்.

பள்ளிகளில், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படிப்பவர்களும், இளநிலை அறிவியல் பட்டப்படிப்பில் முதல் அல்லது இரண்டாம் வருடம் படிப்பவர்களும், எம்.பி.பி.எஸ். படிப்பவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த உதவித்தொகை 4000 முதல் 7000௦௦௦ டாலர்கள் வரை மதிப்புடையது. மாணவர் தகுதிக்கேற்ப தொகை வேறுபாடும்.

இந்த உதவித்தொகை திட்டத்தின் பல்வேறு வகைகளை நாம் இங்கே விரிவாக வழங்கியுள்ளோம்.

அடிப்படை அறிவியல்கள்:

ஸ்ட்ரீம் எஸ்.ஏ:

11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் இந்த வகையில் சேருகிறார். அதேசமயம் அவர் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் குறைந்தது 75 % மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

ஸ்ட்ரீம் எஸ்.பி+2 :

தற்போது 12 ஆம் வகுப்பு படித்துக்கொண்டு, இளநிலை அடிப்படை அறிவியல் படிப்புகளில் சேர ஆர்வமாக இருக்கும் அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் இந்த உதவித்தொகையை பெற, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் குறைந்தபட்சம் 75 % மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

ஸ்ட்ரீம் எஸ்.பி:

இளநிலை அடிப்படை அறிவியல் படிப்புகளை படிக்கும் மாணவர்கள் அனைவரும் இதற்கு தகுதி பெற்றவர்கள். அதேசமயம் அவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அறிவியல் பாடங்களில் குறைந்தது 60 % மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

ஸ்ட்ரீம் எஸ்.பி: (மருத்துவம்)

ப்ராஜெக்ட் செய்ய விரும்பும் எம்.பி.பி.எஸ். மாணவர்கள் இதற்கு தகுதியுடையவர்கள். அவர்கள் முதல் அல்லது இரண்டாம் வருடம் படிப்பவர்களாக இருக்க வேண்டும். மேலும் அவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அறிவியல் பாடங்களில் குறைந்தது 75 % மதிப்பெண் பெற்றவராகவோ, முதல் வருட எம்.பி.பி.எஸ். படிப்பில் குறைந்தது 60 % மதிப்பெண் பெற்றவராகவோ இருத்தல் வேண்டும். மேலும் பயோமெடிக்கல் ஆராய்ச்சி ப்ராஜெக்ட் நகலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

ஸ்ட்ரீம் எஸ்.பி: (அடிப்படை அறிவியல்கள்)

ப்ராஜெக்ட் செய்ய விரும்புபவர்கள், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிப்பவர்கள், அடிப்படை அறிவியலில் பி.எஸ்சி/பி.எஸ்/இன்ட் எம்.எஸ்சி போன்ற படிப்புகளில் முதல் அல்லது இரண்டாம் வருடம் படிப்பவர்கள் மற்றும் பி.இ/பி.டெக்/பி.ஆர்க் போன்ற படிப்புகளில் முதல் அல்லது இரண்டாம் வருடம் படிக்க வேண்டும். மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கும் மாணவர்கள், முதல் வருட படிப்பில் குறைந்தது 60% பெற்றிருக்க வேண்டும். மேற்கூறிய அனைத்து பிரிவுகளிலும் எஸ்.சி/எஸ்.டி பிரிவை சேர்ந்தவர்கள் 10% மதிப்பெண் விலக்குபெற தகுதியுடையவர்கள்.

தேர்ந்தெடுக்கும் முறை:

இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் ஒவ்வொரு மாணவரும், தமது ப்ராஜெக்ட் அறிக்கையை(இந்த விண்ணப்பத்திற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டது மற்றும் செய்யப்பட்டது) இந்த விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். பிறருடன் இணைந்து செய்த பிராஜெக்டுகள் ஏற்றுக்கொள்ளப்படாது. ப்ராஜெக்ட் மற்றும் விண்ணப்பத்தை ஆய்வுசெய்த பிறகு, தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதுவே கடைசி கட்டமாகும்.

அடிப்படை அறிவியல் பாடங்கள்:

விண்ணப்பங்களை சரிபார்த்தல் மற்றும் பள்ளித்தேர்வில் எடுத்த மதிப்பெண்களை அளவிடுதல் ஆகியவை முடிந்தப் பின்னர், அனைத்து தகுதியான மாணவர்களும், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடத்தப்படும் திறனாய்வு தேர்வை எழுத வேண்டும். இந்த தேர்வானது, நாட்டின் பல்வேறு மையங்களில் நடத்தப்படும். தேர்வு பற்றிய விவரங்கள் கே.வி.பி.ஒய். வலைதளத்தில் வெளியிடப்படும்.

இதைப்பற்றிய மேலும் விவரங்களுக்கு,

www.kvpy.org.in என்ற வலைதளத்தை அணுகவும் அல்லது application@kvpy.org.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *