ஆதர்ஷ் ஊழலில் சிக்கி பதவியிழந்த அசோக் சவானுக்கு எம்.பி. பதவி-சோனியா தரும் ஆறுதல் பரிசு

posted in: அரசியல் | 0

டெல்லி: ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் விவகாரத்தினால் பதவியை இழந்த மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவானுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளித்து அவரை ஆறுதல் படுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்துள்ளாராம்.

ஆதர்ஷ் ஊழல் பிரச்சனையில் அசோக் சவானுக்கு தொடர்பு இருப்பது தெரி்ய வந்ததையடுத்து கட்சி மேலிடம் அவரைத் தூக்கிவிட்டு ப்ரித்விராஜ் சவானை முதல்வராக ஆக்கியது.

பதவி பறிக்கப்பட்டபோதிலும் அசோக் சவான் கட்சிக்கு எதிராக எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இதனால் அவரின் அமைதிக்கு பரிசளித்து கெளரவிக்க காங்கிரஸ் மேலிடம் தீர்மானித்துள்ளது.

முதல்வர் பதவியில் அமர்ந்துள்ள பிருத்விராஜ் சவான் தனது ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அந்த இடம் தற்போது காலியாக உள்ளது. அந்த இடத்திற்குத்தான் அசோக் சவானை கொண்டு வரப் போகிறாராம் சோனியா காந்தி.

மேலும் தக்க சமயத்தில் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி அளிக்க சோனியா தீர்மானித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
English summary

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *