கொச்சி : இந்தியாவின் முதல் வெப் டி.வி., இந்தியாவைப்ஸ் ஜனவரி 1ம் தேதியன்று துவக்கப்படுகிறது. கொச்சியை தலைமையிடாக கொண்டு செயல்படும் வைப்ஸ் விஷூவல் அண்ட் மீடியா பிரைவேட் லிமிடட் இந்த வெப் டி.வி., சேவையை துவக்குகிறது.
இதன் நிறுவனர் கே.சசிகுமார். இந்தியாவைப்ஸ் சேவை குறித்து அவர் கூறுகையில் : வளைதள ஆர்வலர்களை குறிவைத்து இந்த வெப் டி.வி., ஆரம்பிக்கப்படுவதாகவும். இதன் நிகழ்ச்சிகள் அனைத்தும் பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வெப் டி.வி., கான்சப்ட் பொருத்த வரை இதுவரை அது ஒரு பெரிய லாபகரமான பிசினசாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. வெகுஜனத்தை வெப் டி.வி., மூலம் கவர்ந்திழுப்பது அசாத்யமான காரியாமாவே கருதப்பட்டு வந்தது. ஆனால் நம்பிக்கையை மூலதனமாக கொண்டு வெப் டி.வி., சேவையை துவக்குகிறோம். இந்தியா வைப்சி்ல் பேஷன். இசை, சினிமா, தொழில்நுட்பம், பிளாக்கிங், லைப்ஸ்டைல், நாட்டுநடப்பு என எல்லாவற்றையும் முழுமையாக கவர் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எந்த ஒரு சவாலான சூழ்நிலையையும் சாதகமாக மாற்றிக் கொள்ளும் திறன் மிக்க இளைய தலைமுறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முதல் கட்டமாக டில்லி, மும்பை, சென்னை . பெங்களூரு, ஆகிய பெருநகரங்களின் இந்தச் சேவையை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா வைப்ஸ் வெப் டி.வி.,யை சர்வதேச அளவில் மிகப்பெரிய ஹிட்டாக்குவதே எங்கள் லட்சியம். சர்வதேச பார்வையாளர்கள் பொழுதுபோக்கு அம்சங்களை தேட ஒரே தளமாக இந்தியா வைப்ஸ் இருக்க வேண்டும் என்பது லட்சியம். இவ்வாறு சசிகுமார் கூறினார்.
Leave a Reply