மும்பை : பிரான்சை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மருந்து தயாரிப்பு நிறுவனமான சனோபி அவென்டிஸ் நிறுவனம், அடுத்த ஆண்டின் பிற்பகுதியில், இந்தியாவில் இன்சுலின் பேனாவை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து, சனோபி அவென்டிஸ் (தென் இந்தியா) நிறுவன துணை தலைவர் சைலேஷ் அய்ய்ஙகார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : இது (இன்சுலின் பேனா), பல இந்திய நிறுவனங்களின் கூட்டு ஒத்துழைப்போடு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார். இந்தியாவில், காம்பிபிளேம் என்ற பெயர் கொண்ட வலி நீக்கும் மாத்திரையை ஆண்டு ஒன்றுக்கு 1.6 பில்லியன் என்ற அளவில் விற்பனை செய்து வருவதாகவும், 2011 ஜனவரி முதல் இந்தியச் சந்தையில் காம்பிபிளேம் கிரீமை அறிமுகம் செய்ய உள்ளதாகவும், இந்தியாவின் கிராமப்புறங்களில் விற்பனையை அதிகரிக்க தாங்கள் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply