இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பகல்-இரவாக நடக்கிறது.
இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது.
குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.200 ஆகவும், அதிகபட்ச விலை ரூ.15 ஆயிரமாகவும் நிர்ணயிக்கப்பட்டது. ரூ.500, ரூ.1,500, ரூ.2,500, ரூ.3 ஆயிரம், ரூ.4 ஆயிரம், ரூ.8 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.12 ஆயிரம் ஆகிய விலையிலும் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.
டிக்கெட்டை வாங்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். காலையில் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் நீண்ட கியூவில் நின்று டிக்கெட் வாங்கினார்கள். ரூ.200-க்கான டிக்கெட்டை வாங்குவதில்தான் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல ரூ.500-க்கான டிக்கெட்டை வாங்குவதிலும் ரசிகர்கள் ஆர்வம் காட்டினார்கள்.
சென்னையில் 2 ஆண்டு களுக்கு பிறகு சர்வதேச போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் இடையே அதிக ஆர்வம் காணப்படுகிறது. கடைசியாக 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா- இங்கிலாந்து மோதிய டெஸ்ட் போட்டி நடந்தது.
2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதிய ஒருநாள் போட்டி நடைபெற்றது. அதன்பிறகு 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் ஆப்பிரிக்கா லெவன்-ஆசிய லெவன் மோதிய போட்டிகள் நடந்தது.
கடந்த மார்ச் மாதம் ஐ.பி.எல். போட்டிகள் நடந்தது. சேப்பாக்கம் ஸ்டேடியம் தற்போது சீரமைத்து கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
1 1
Leave a Reply