வாஷிங்டன்: இந்தியா மீது கடும் வெறுப்புணர்வை உமிழ்ந்தான் அமெரிக்க பாகிஸ்தானியரான டேவிட் கோல்மேன் ஹெட்லி.
இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா செயல்படுவதாக இருந்தால் தான் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதை நிறுத்தி விடுவதாகவும் அவன் அமெரிக்க எப்பிஐ அதிகாரிகளை எச்சரித்தான் என்று விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணத் தகவல் தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் பிறந்த பாகிஸ்தானியர் ஹெட்லி. லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஆவான். மும்பை தீவிரவாத தாக்குதலில் மூளையாக திகழ்ந்தவர்களில் இவனும் ஒருவன்.
இவனை கைது செய்த அமெரிக்க எப்பிஐ அதிகாரிகள் அவனை விசாரித்தபோது இந்தியா மீதான தனது வெறுப்புணர்வை வெளிப்படுத்தியதாக எப்பிஐ இயக்குநர் ராபர்ட் முல்லர், தன்னை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சந்தித்த மத்திய வெளியுறவு அமைச்சர் ப.சிதம்பரத்திடம் தெரிவித்துள்ளார்.
இதை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டிமோத்தி ரோமர் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் அடங்கிய அமெரிக்க தூதரக ஆவணத்தை விக்கிலீக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.
அதில், ஹெட்லி வழக்கில் போதிய அளவுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகிறான். இருப்பினும் இந்தியா மீதான வெறுப்புணர்வு அவனுக்கு அதிகமாக உள்ளது. ஒரு கட்டத்தில், இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா செயல்பட்டு, தனக்கு எதிராக ஆதாரங்களைத் திரட்ட முயற்சித்தால், விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மாட்டேன் என்று அவன் திட்டவட்டமாக தெரிவித்தான். இதை ப.சிதம்பரத்திடம் முல்லர் தெரிவித்துள்ளார் என்று அத்தகவலில் ரோமர் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை இதன் காரணமாகவே இந்திய விசாரணை அதிகாரிகளை ஹெட்லியை விசாரிக்க விடாமல் அமெரிக்கா தடுத்து வந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது.
Leave a Reply