பெங்களூர்: நாட்டின் 2வது மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் தனது தொழில் ‘ரகசியம்’ குறித்த நூலை வெளியிடுகிறது.
Leadership @ Infosys என்ற பெயரில் வெளியாகும் இந்த நூலில் இன்போசிஸ் நிறுவனத்தின் தொழில் உத்திகள், தலைமைத்துவ செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து தகவல்கள் இடம் பெறவுள்ளன.
டிசம்பர் 13ம் தேதி வெளியாகும் இந்த நூலை பெங்குயின் இந்தியா கொண்டு வருகிறது. இன்போசிஸ் நிறுவனத்தின் தொடர் வெற்றிக்கு என்ன காரணம் என்பது குறித்தும் இந்தநூலில் விளக்கப்பட்டுள்ளதாம்.
இதுகுறித்து நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியும், நிர்வாக இயக்குநருமான கோபாலகிருஷ்ணன் கூறுகையில், தலைமைத்துவ கோட்பாடு உள்ளிட்டவை குறித்து இதில் நாங்கள் விளக்க முற்பட்டுள்ளோம். ஒவ்வொருவரின் சுய அனுபவத்தின் அடிப்படையில் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த நூலின் ஆசிரியர் இன்போசிஸ் தலைமைத்துவ கழகத்தின் துணைத் தலைவரும், இயக்குநருமான மாட் பார்னி ஆவார். இதற்கு இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி அணிந்துரை வழங்கியுள்ளார்.
Leave a Reply