சூரிச்: 2018ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை ரஷ்யா நடத்தவுள்ளது. அதே போல 2022ம் ஆண்டு போட்டிகளை கத்தார் நடத்தவுள்ளது.
இந்த போட்டிகளை நடத்துவதற்கான ஏலம் சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் நடந்தது.
இதில் 2018ம் ஆண்டுக்கான போட்டியை நடத்த ஏலம் எடுக்க ஸ்பெயின், போர்ச்சுகல், பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகள் போட்டியிட்டன.
இதில் ரஷ்யா, இங்கிலாந்து இடையே தான் கடும் போட்டி நிலவியது. இறுதியில் ரஷ்யா ஏலத்தை வென்றது. இதையடுத்து 2018ம் உலகப் கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
அதேபோல 2022ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை போட்டியை நடத்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, ஜப்பான், கத்தார் ஆகிய நாடுகள் போட்டியிட்டன. இறுதியில் கத்தார் ஏலத்தை வென்றது.
உலகக் கோப்பை போட்டிகளை நடத்தவுள்ள முதல் வளைகுடா நாடு கத்தார் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் 2014ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளை பிரேசில் நடத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply