துபாய் : இந்தியாவின் முன்னணி கனரக வாகனங்களான பஸ் மற்றும் டிரக் தயாரிப்பு நிறவனமான இந்துஜா குழுமத்தின் அசோக் லேலண்ட் நிறுவனம், ஐக்கிய அரபு எமிரேட்சில் வாகன பாகங்கள் அசெம்பிளிங் பிளாண்ட்டை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அசோக் லேலண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : ஐக்கிய அரபு எமிரேட்சில் அசெம்பிளிங் பிளாண்ட் அமைப்பது தொடர்பாக, ராஸ் அல் கைமா இன்வெஸ்ட்மெண்ட் அத்தாரிட்டி (ஆர்ஏகேஐஏ) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளதாகவும், முதலில் அசெம்பிளிங் பிளாண்ட்டாக உள்ள இந்த தி்டடம், விரைவில் மேம்படுத்தப்பட்டு கனரக வாகனங்கள் தயாரிப்பு யூனிட்டாக தரம் உயர்த்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Leave a Reply