காங்கிரசில் இருந்து விலகிய ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆந்திராவில் ஆதரவுபெருகி வருகிறது.
ஏராளமான மாநில, மாவட்ட, வட்ட நிர்வாகிகள் காங்கிரசில் இருந்து விலகி ஜெகன்மோகன் ரெட்டி அணியில் சேர்ந்து வருகிறார்கள்.ஐதராபாத்தில் ராகுல் காந்தி இளைஞர் அணியில் ஆயிரக் கணக்கான தொண்டர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஜெகன் மோகனை ஆதரிக்கிறார்கள். அவர்கள் நேற்று ராகுல் காந்தி இளைஞர் அணியை கூண்டோடு கலைத்து விட்டு ஜெகன்மோகன் ரெட்டி முன்னிலையில் அவரது அணியில் சேர்ந்தனர். அவர்கள் கூறும் போது,
ஜெகன் மோகன் ரெட்டி மிகவும் திறமையானவர். ஏழை-எளிய மக்களுடன் நெருங்கி பழகுவார்.அவர் முதல்வரானால் ஆந்திரா பல மடங்கு முன்னேற்றம் அடையும்.
ராகுல் காந்தி அடுத்த தேர்தலில் பிரதமர் ஆகி விடலாம் என்று கனவு கண்டார். அது இனி பலிக்காது.
மத்தியில் காங்கிரசை ஆட்சியில் அமர வைத்த மாநிலம் ஆந்திராதான். ஆனால் காங்கிரஸ் மேலிடம் ஆந்திராவில் திறமை இல்லாத முதல்வர்களை நியமித்து கலவர பூமியாக மாற்றி விட்டது.
இதை இனி நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஜெகன் போன்ற திறமையான முதல்வரை நாங்களே தேர்ந்தெடுத்து விடுவோம் என்றனர்.
ஜெகன்மோகன் ரெட்டியை அனகாபள்ளி காங்கிரஸ் எம்.பி. சப்பம் ஹரி நேற்று சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். மேற்கு கோதாவரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் மகேன் ராஜு தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஜெகன் அணியில் சேர்ந்தார்.
இதே போல் ஏராளமான முக்கிய நிர்வாகிகள் ஜெகன் அணியில் இணைந்து வருவ தால் காங்கிரஸ் கூடாரம் காலியாகி வருகிறது. இதனால் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதிர்ச்சி அடைந் துள்ளனர். கிராமப் புறங்களில் உள்ள பெரும்பாலான காங்கிரஸ் தொண்டர்கள் ஜெகன் பக்கம் தாவிவிட்டனர். இதனால் தேர்தலின் போது வாக்குச் சாவடி ஏஜெண்டு களை நியமிப்ப தற்கு கூட நிர்வாகிகள் இல்லை.
Leave a Reply