மதுரை : “”அடுத்த ஐந்து மாதங்களுக்கு பின், தி.மு.க., அரசு இருக்காது,” என மதுரை ஒத்தக்கடையில் ம.தி.மு.க., நிர்வாகி இல்ல விழாவில் பேசிய பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.
அவர் பேசியதாவது: டிச.,10 மனித உரிமை நாள். கடந்தாண்டு மனித உரிமை மீறல்களில் இலங்கை அரசு அத்துமீறி ஈடுபட்டது. பெண்களை ஈவு இரக்கமின்றி கற்பழித்து கொன்றது. தமிழர்களை நாசப்படுத்தி, ராஜபக்ஷே அரசு துப்பாக்கி முனையில் கொல்வதாக கடந்தாண்டு குரல் கொடுத்தேன். அது பொய் என மத்திய, மாநில அரசுகள் தெரிவித்தன. தற்போது லண்டனில் ராஜபக்சேவை நுழைய விடாமல் ஆயிரக்கணக்கான தமிழர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.நாஞ்சில் சம்பத்தை தவறாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் தி.மு.க., அரசு சிறையில் அடைத்தது. பின், ஐகோர்ட் அவரை விடுவித்தது. குளத்தூர் மணி கைதாகி விடுதலையானார். தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் மீது தி.மு.க., அரசு பாதுகாப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறது.
அடுத்த ஐந்து மாதங்களுக்கு பின், தி.மு.க., அரசு இருக்காது.மெகா ஊழலாக ஸ்பெக்ட்ரம் விவகாரம் உள்ளது. இதில் முன்னாள் அமைச்சர் ராஜாவுக்கு மட்டுமின்றி காங்கிரசுக்கும் பங்குள்ளதாக சுப்ரமணியசாமி போன்றோர் தெரிவிக்கின்றனர். இப்பிரச்னையை மக்களிடம் கொண்டு செல்வோம். தேர்தல் நேரத்தில், லஞ்ச பணத்தை மக்களுக்கு வழங்கி நாட்டை லஞ்சமயமாக்க தி.மு.க., திட்டமிடுகிறது. இவ்வாறு பேசினார்.
Leave a Reply